LinkWithin



படம் : புது புது அர்த்த‌ங்க‌ள்
பாடியவர் : SP.பாலசுப்ரமணியம்
இசை : இளையாராஜா

கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்!
கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே,
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!

கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

வாலிபங்கள் ஓடும், வயதாகக்கூடும்,
ஆனாலும் அன்பு மாறாதது!
மாலையிடும் சொந்தம், முடிபோட்ட பந்தம்,
பிரிவென்னும் சொல்லே அறியாதது!
அழகான மனைவி, அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே!
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே!
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி!
நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி!
சந்தோஷ சாம்ராஜ்யமே!

கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே,
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!
கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து,
பாடென்று சொன்னால் பாடாதம்மா!
தோகை மயில் தன்னைச் சிறை வைத்துப் பூட்டி,
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா!
நாள்தோறும் ரசிகன், பாராட்டும் கலைஞன்,
காவல்கள் எனக்கில்லையே!
சோகங்கள் எனக்கும், நெஞ்சோடு இருக்கும்,
சிரிக்காத நாளில்லையே!
துக்கம் சில நேரம் பொங்கி வரும்போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே!
என் சோகம் என்னோடுதான்!


கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே,
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!
கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

ம்ம்..ம்ம்..ம்ம்...ம்ம்..ம்ம்

Rated 4.6/5 based on 28 votes

0 Response to " "

Post a Comment

Select Category

anushka KJ ஜேசுதாஸ் S.ஜானகி SN.சுரேந்த‌ர் SP.பாலசுப்ரமணியம் அக்னி நட்சத்திரம் அமைதிப்படை அருண்மொழி அலைகள் ஓய்வதில்லை அவள் அப்படிதான் அன்புள்ள ரஜினிகாந்த் இதயத்தை திருடாதே இதயம் இளமை காலங்கள் இளையராஜா உமா ரமணன் உளியின் ஓசை உன‌க்காவே வாழ்கிறேன் ஊரு விட்டு ஊரு வந்து ஊரெல்லாம் உன் பாட்டு என் ராசவின் மனசிலே கடலோரக் கவிதைகள் கமல் கார்த்திக் கிழக்கு வாசல் குங்குமச் சிமிழ் குஷ்பு கேப்டன் மகள் கேளடி கண்மணி சத்யராஜ் சத்ரியன் சரத்குமார் சித்ரா சிவா சினிமா கட்டுரைகள் சினிமாவும் நானும் சின்ன தம்பி தர்மதுரை தாலாட்டு பாடவா தீப‌ன் ச‌க்க‌ர‌வ‌ர்த்தி நந்தவனத் தேரு பாட்டு வாத்தியார் பானுப்பிரியா பி.சுசீலா பிதாமகன் பிரபு புது புது அர்த்த‌ங்க‌ள் புன்னகை மன்னன் பூவே பூச்சூடவா பெரிய வீட்டு பணக்காரன் போதிதர்மர் ம‌லேசியா வாசுதேவ‌ன் மறுபடியும் மனோ முரளி மோகன் மௌனம் சம்மதம் ரஞ்சிதா ரஜினிகாந்த் ராதா ராஜா கைய வச்சா ரேவதி வண்ண வண்ண பூக்கள் வள்ளி வாலி விஜயகாந்த் வைதேகி காத்திருந்தாள் வைரமுத்து ஜெயச்சந்திரன் ஸ்ரீ ராம் பார்த்த சாரதி ஸ்வர்ணலதா ஹன்யா ஹீரா