படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வாலி
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேணில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பந்தாடும்
(நலம் வாழ..)
மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதர்கிந்த சோகம் கிளியே...
(நலம் வாழ..)
கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்..
(நலம் வாழ..)
Rated 4.6/5 based on 28 votes
0 Response to "நலம் வாழ என்னாளும்..."
Post a Comment