படம் : உளியின் ஓசை
பாடியவர்கள் : ஹன்யா, ஸ்ரீ ராம் பார்த்த சாரதி
இசை : இளையராஜாmale:purple
female:green
கல்லாய் இருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய்
சிலையாய் வளர்ந்தேன் உயிரை ஏன் கொடுத்தாய்
உன் நெஞ்சின் உணர்வுகள் என்னுள்ளே புகுந்ததே
சொல்லில் வருமோ வருமோ சொல்லை எடுத்து தருவாய்
கல்லாய் இருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய்
சிலையாய் வளர்ந்தேன் உயிரை ஏன் கொடுத்தாய்
உனை பார்த்த கண்கள் விலாகது எங்கும் உன்னிலே பதியும்
சுழன்றாடும் கனவில் சொல்லாது சென்று சுகத்திலே அலையும்
யார் ஆர்க்கும் மண்ணில் நிலைக்காது அழகு காலத்தின் ஒழுங்கு
நீ எனக்கு தந்த நிலையான் அழகில் கூடுமோ வயது
உன்னுடல்தனில் என்னுயிர்தனை கலந்தே என்றும் வாழ்வேன்
காலங்கள் நமை பிரிக்குமோ சிலையோடு சேர்ந்து கால நேரம் நின்றது
கல்லாய்...
கல்லாய்இருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய்
என் கண்கள் கூறும் நீ தந்த பாகம் உனக்கு தான் புரியும்
உன் நெஞ்சில் உண்மை சொல்லாமல் இங்கு எனக்கு தான் தெரியும்
பரிமாறி கொள்ள பரிபாசை இங்கு நமக்கு தான் எதற்கு
உள் அன்பு கொண்டு உறவாடும் நம்மை புரியுமோ பிறர்க்கு
ஆசையும் உளியின் ஓசையும் எனது உயிரின் நாதம் ஆகும்
காதலாய் இதை சொல்லவா என்றும் அழியும் உலகில் அழி ந்திடாத உறவிது
கல்லாய்...
கல்லாய்...
கல்லாய் இருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய்
சிலையாய் வளர்ந்தேன் உயிரை ஏன் கொடுத்தாய்
என் நெஞ்சின் உணர்வுகள் இங்கு உன்னுள்ளில் புகுந்ததே
சொல்லில் வருமோ வருமோ சொல்லை எடுத்து தருவாய்
கல்லாய் இருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய்
http://www.youtube.com/v/m-g6UrJ2pWKpk
(http://i856.photobucket.com/albums/ab130/Heartbeat777/Uliyin-Oosai-release.jpg)
Rated 4.6/5 based on 28 votes
0 Response to "கல்லாய் இருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய்"
Post a Comment