படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்க்ள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பெ: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ: இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே...
ஆ: ஓ.. கொத்து மலரே.. அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று.. இது தீயின் ஊற்று
பெ: ஆ.. ஆஹா.. ஆஹா.. கொத்து மலரே.. அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று.. இது தீயின் ஊற்று
ஆ: உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
பெ: புல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும்
ஆ: அடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
...
ஆ: ஹே.. வீட்டுக் கிளியே.. கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
பெ: புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை
ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை
ஆ: கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்
பெ.குழு: ஆயிரம் தாமரை
பெ: நந நந..
பெ.குழு: ஆயிரம் தாமரை
பெ: நந நந நநந நநந..
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ: இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
Rated 4.6/5 based on 28 votes
0 Response to "ஆயிரம் தாமரை மொட்டுக்களே"
Post a Comment